
செய்திகள் தொழில்நுட்பம்
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
வாஷிங்டன்:
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேற்றே விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது, தற்போது மீண்டும் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பயணத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.
கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm