
செய்திகள் தொழில்நுட்பம்
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
"May Day" மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டார்கள்.
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெட்ஹெட் (Deadhead) என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அல்லது பேன்-பேன் (Pan-pan) என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா? இந்த வார்த்தைகளுக்கான விளக்கங்களை நீங்கள் தெரிந்து வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இவை எல்லாம் விமானங்களின் பைலட்கள் பேசும் ரகசிய மொழியின் சில வார்த்தைகள்.
பைலட்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த ரகசிய மொழியை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பைலட்களும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் ஒருபோதும் வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பொதுவான ஒரு ரகசிய மொழி உருவாக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களை தவிர்ப்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். ஏனெனில் பைலட்களும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டால், பயங்கரமான விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். வார்த்தைகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த காலங்களில் மோசமான விமான விபத்துக்கள் அரங்கேறியுள்ளன.
எனவேதான் பைலட்களும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும், எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ரகசிய மொழி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மொழில் உள்ள முக்கியமான வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன? என்பதை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.
மேடே (Mayday): விமான பயணங்களின்போது நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை இதுதான். இன்ஜின் முழுமையாக செயலிழப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழல்களில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். m'aidez என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து மேடே என்ற வார்த்தை உருவானது.
'உதவி செய்யுங்கள்' என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் ஆகும். உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் தொடங்கும்போது, பைலட்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும். இப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது என்பதை குறிக்கும் விதமாகதான், இதனை நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத வார்த்தை என தொடக்கத்தில் கூறினோம்.
பேன்-பேன் (Pan-pan): இதுவும் அவசர சூழ்நிலையை குறிக்க கூடிய ஒரு வார்த்தைதான். எனினும் மேடே அளவிற்கான அவசர சூழல் கிடையாது. அதற்கு கீழ் நிலையில் உள்ள அவசர சூழல் என்று வேண்டுமானால் சொல்லலாம். தீவிரமான ஒரு பிரச்னைதான். ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது போன்ற சமயங்களில் பைலட்களில் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
panne என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து பேன்-பேன் என்ற வார்த்தை உருவானது. இதற்கு செயலிழப்பு என்று பொருள். இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பேன்-பேன், பேன்-பேன், பேன்-பேன் என விமானங்களின் பைலட்கள் மூன்று முறை கூறுவார்கள். எனவே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
வில்கோ (Wilco): will comply என்பதன் சுருக்கம்தான் Wilco. எங்களுக்கு தகவல் கிடைத்து விட்டது. அதற்கு இணங்குகிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம். தகவல் கிடைத்தவுடன், அதனை செய்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு விமானங்களின் பைலட்கள் வில்கோ என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்டாண்ட்பை (Standby): தயவு செய்து காத்திருங்கள் என்பதுதான் இதன் அர்த்தம் ஆகும். பொதுவாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களோ அல்லது பைலட்களோ, மெசேஜ்களுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவிற்கு மிகவும் பிஸியாக இருக்கும் சமயங்களில், ஸ்டாண்ட்பை வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
டெட்ஹெட் (Deadhead): விமானத்தின் ஊழியர்களில் யாராவது ஒருவர், பயணிகளின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தால், அதை குறிப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். பைலட்களும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் இதுபோல் ஏராளமான ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆதாரம்: Tamil One India
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am