
செய்திகள் தொழில்நுட்பம்
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
புது டெல்லி:
மோசமான வானிலை காரணமாக நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளி பயணம் நாளை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.
கடந்த 1984-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இந்த ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am