நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

BSNL மறுசீரமைப்பு செய்ய ரூ.1.64 லட்சம் கோடி

புது டெல்லி:

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான BSNL நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்குப் புதிய மூலதனம், அலைக்கற்றை ஒதுக்கீடு, இருப்பு பற்றாக்குறையை சரிசெய்தல், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் (பாரத் பிராட்பேண்ட் நிகம் லிமிடெட்) நிறுவனத்தை இணைப்பதன் மூலம் கம்பிவட சேவையை விரிவுபடுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத் திட்டத்துக்கு ரூ.43,964 கோடி ரொக்கமாகவும், 1.2 லட்சம் கோடி ரொக்கமில்லாத வகையிலும் அடுத்த 4 ஆண்டுக்கு அளிக்கப்படும்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த மூலதனமாக ரூ.22,471 கோடி நிதியளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset