நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை

புது டெல்லி:

அக்னி பிரைம் ஏவுகணையை ரயிலிலிருந்து ஏவி வெற்றிகரமாக இந்தியா  சோதித்தது. 2,000 கி.மீ. தொலைவிலான இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

போர் சூழலில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவுகணை ஏவுவதை உறுதிப்படுத்த இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஓடும் ரயிலிலிருந்து ஏவுகணை ஏவும் திறனைப் பெற்றுள்ள சில குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

முன்பு சாலை மார்க்கமான வாகனத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை  ஏவி வெற்றிகரமாக ராணுவத்தில் இணைக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset