நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்:

சைபர் செக்கியூரிட்டியின் மலேசியாவில் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தொடக்கி வைத்தார்.

நாட்டின் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி, தடயவியல் திறன்களை வலுப்படுத்தும் இந்த முயற்சி, ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். 

இது, இன்றைய நவீன வாகனங்களின் போக்குவரத்துக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல், இயந்திர செயல்திறன், ஓட்டுநர் முறைகள், GPS நிலைப்பாடு, கேமரா பதிவுகள், இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் உள்ளிட்ட இலக்கவியல் தரவுகளின் மையமாகவும் செயல்படுகிறது.

இந்தத் தரவு வாகனத் தொழில் ஆராய்ச்சி, விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு, இலக்கவியல் சான்றுகள், குற்றவியல் வழக்குகள், பொதுப் பாதுகாப்புக்குக் கூட அவசியமான ஒன்றாகும். 

இலக்கவியல் அமைச்சின் நிறுவனம், மிரோஸ், ஜேபிஜே, போலிஸ் என குறிப்பிட்ட அரசு துறைகளோடு இணைந்து இது செயல்படும்.

வாகன தடயவியல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் கீழ்க்கண்டவாறு:

* விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான வாகனத் தரவுகளை ஆராய்ச்சி செய்து பகுப்பாய்வு செய்தல்

* உண்மையான, ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சான்றுகள் வழி, சட்ட அமலாக்க நிறுவனங்களின் டிஜிட்டல் தடயவியல் விசாரணைகளை வலுப்படுத்துதல்
சட்ட நோக்கங்களுக்காக வாகனத் தரவு பகுப்பாய்வுடன் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்

* சட்ட நோக்கங்களுக்காக வாகனத் தரவு பகுப்பாய்வுடன் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்

* தெற்கிழக்காசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மலேசியாவை வாகன டிஜிட்டல் தடயவியலில் மைய நாடாக மேம்படுத்துதல்

இது சாலை விபத்துகளுக்குமட்டும் அல்லாமல், கடத்தல், மனித கடத்தல், வாகன கூறுகளைப் பயன்படுத்தும் எல்லை தாண்டிய குற்றங்களை கையாளும் அதிகாரிகளின் குற்றவியல் விசாரணைகளின் கூறுகளை வலுப்படுத்த இந்த ஆய்வகம்  பெரும் துணையாக அமையும்.

மேலும் வாகன தடயவியல் ஆய்வகத்தை நிறுவுவது நாட்டின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இலக்கவியல் தொழில்நுட்ப பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்தின் அவாவிற்கு ஏற்பவும் உள்ளது என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset