செய்திகள் தொழில்நுட்பம்
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
நியூயார்க்:
செயற்கை நுண்ணறிவைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
"AI கருவிகள் சில நேரங்களில் தவறான தகவலைத் தரலாம்; அதனால் மற்ற வழிகள் மூலம் தகவல்களைச் சரிபார்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.
கூகலின் தேடல் தளமும் மற்ற மென்பொருள்களும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படுவதால் அவற்றைப் பலர் பயன்படுத்துகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் நிறுவனம் அதன் AI தளத் தேடல் முடிவுகளில் பிழை இருக்கலாம் எனும் அறிவிப்பையும் இணைத்துள்ளது என்றார்.
இதற்கிடையில் கூகலின் AI தளங்களில் ஏற்படும் பிழைகள் பற்றி இணையவாசிகள் குறைகூறுவதாகவும் BBC குறிப்பிட்டது.
பயனீட்டாளர்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று சொல்வதற்குப் பதில் கூகல் அதன் AI தளங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
