செய்திகள் தொழில்நுட்பம்
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
கலிபோர்னியா:
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏஐ திறன் கொண்டு இயங்கும் இந்த Grokipedia, விக்கிபீடியாவுக்கு மாற்று என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. சுமார் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தமிழ் உட்பட சுமார் 343 உலக மொழிகளில் தகவல்கள், மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது.
இந்த நிலையில் இதற்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்துள்ளது எக்ஸ் ஏஐ. இந்த தளம் கிட்டத்தட்ட விக்கிப்பீடியாவை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தலைப்பில் தேடலாம்.
இருப்பினும் இதில் உள்ள கட்டுரைகள் பலவும் விக்கிப்பீடியாவில் இருந்து பிரதி எடுத்தது போல உள்ளது என தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Grokipedia தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். இதில் தகவல்களை சேர்க்கவும், திருத்தவும், நீக்கவும் Grok தளத்தின் வசம் பயனர்கள் கோர முடியும். அதே நேரத்தில் பயனர்களின் கோரிக்கையை செய்ய முடிந்ததா / இல்லையா என்பதை Grok தெரிவிக்கும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிபீடியா தளத்தின் ஒற்றை சார்பு அரசியல் காரணமாக மஸ்க் Grokipedia-வை அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
