நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியாவில் 5ஜி ஏலம் முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடி

புது டெல்லி:

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி முதல நாளில் ரூ. 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

"முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இதன் மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகும். இது 2015இல் படைத்த வரலாற்றையும் இந்த ஏலம் முறியடித்துள்ளது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ. 5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 2,200 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளன. அதே நேரம், அதானி நிறுவனம் ரூ. 100 கோடி அளவில் மட்டுமே செலத்தியுள்ளது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கும் எனத் தெரிகிறது.
5ஜி ஏலம் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 14க்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு செப்டம்பரில் இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset