நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்திய வம்சாவளி பேராசிரியர் கெளசிக் ராசேகரவுக்கு சர்வதேச விருது

ஹூஸ்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கௌசிக் ராசேகராவுக்கு சர்வதேச எரிசக்தி விருது கிடைத்துள்ளது.

கௌசிக் ராசேகரா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் சர்வதேச எரிசக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மின்மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம், மின் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ராசேகராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset