நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

பிரிட்டனில் மென்பொருள், தகவல்-தொழில்நுட்ப சேவை வழங்குவதில் TCS நிறுவனம் முதலிடம்

பெங்களூரு:

பிரிட்டனில் மென்பொருள், தகவல்-தொழில்நுட்ப சேவை வழங்குவதில் வருவாய் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக டாட்டா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியதாவது:
பிரிட்டனில் செயல்பட்டு வரும் மென்பொருள் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து "டெக் மார்க்கெட் வியூ' நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இதில், அங்கு செயல்பட்டு வரும் 30 நிறுவனங்களில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை (எஸ்ஐடிஎஸ்) அளிப்பதில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமாக டிசிஎஸ் முதலிடம் பெற்றது.

இதையடுத்து, பிரிட்டனில் "எஸ்ஐடிஎஸ்' வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாக பட்டியலில் முதலிடத்தை டிசிஎஸ் தக்கவைத்துக் கொண்டது

பிரிட்டனின்  பெருநிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் பணிகளில்  ஆழமாக இணைந்து செயல்படுவதில் ஆர்வமாக உள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர்  அமிதாப் கபூர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset