நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நபராக அறிவிப்பு

கொல்கத்தா: 

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அக் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீஸார் தேடப்படும் நபருக்கான நோட்டீஸை பிறப்பித்துள்ளது.

நபிகள் நாயகம் குறித்த அவருடைய சர்ச்சை கருத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து 4 முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை கொல்கத்தா போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கொல்கத்தாவின் ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையம் மற்றும் நார்கெல்தங்கா காவல் நிலையங்களில் அவர் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இரு காவல் நிலையங்கள் சார்பில் அவருக்கு தலா இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டன.

ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸை கொல்கத்தா காவல் துறை பிறப்பித்துள்ளது' என்றார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset