நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவின் பலூன்களால் கொரோனா பரவல்: வட கொரியா குற்றச்சாட்டு

சியோல்: 

தென் கொரியாவிலிருந்து எல்லை தாண்டி பறக்கவிடப்படும் பலூன்கள் மூலம்தான் தங்கள் நாட்டில் கொரோனா பரவியதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

தென்கிழக்கு எல்லை நகரான இபோ அருகே கொரோனா பரவல் அதிகமிருந்ததை தொற்றுநோய் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அந்த நகரைச் சேர்ந்த 18 வயது ராணுவ வீரர் ஒருவரும் 5 வயது சிறுவனும் கடந்த ஏப்ரல் மாதம் எல்லைக்கு அப்பால் வந்த பொருளைத் தொட்ட பிறகு அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தவிர, அந்த நகரைச் சேர்ந்த பலர் கொரோனா அறிகுறிகளுடன் தலைநகர் பியாங்கியாங்குக்கு வந்தனர். இதன் காரணமாக அந்த நோய் நாட்டில் பரவியது.

எனவே, எல்லைக்கு அப்பாலிருந்து பறந்து வரும் எந்தப் பொருள்களையும் தொட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று வட கொரியா அரசு ஊடகம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset