
செய்திகள் இந்தியா
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
புது டெல்லி:
இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
நுபர் சர்மாவின் நாவால் வெளியான வார்த்தைகளால் இந்தியாவே பற்றி எரிகிறது. ஆனால் அவர் தனக்கு பாதுகாப்பில்லை இல்லை என்று இங்கு முறையிடுகிறார்.
அவருக்கு எதிரான பதிவான வழக்குகளில் தில்லி போலீஸார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மேலும் எங்களை பேச வைக்காதீர்கள் என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து அவரது மனுவை திரும்பப் பெற கூறி வழக்கை விசாரிக்காமல் சென்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக கடந்த மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கலந்துகொண்டார்.
அப்போது அவர் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததார். அவரின் பேச்சுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
அவரின் கருத்துகளுக்கு கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை பாஜகவில் இருந்து கட்சி இடைநீக்கம் செய்தது.
அவர் மீது மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காவல் நிலையங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அந்த முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நாங்கள் நூபுர் சர்மா கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியைப் பார்த்தோம். அவரின் கருத்துகள் அமைதியைக் குலைப்பதாக உள்ளன.
மக்களின் உணர்வுகளை அவர் தூண்டிது நாட்டில் மோசமான வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளன.
இந்தச் சம்பவங்களுக்கு அவர் மட்டும்தான் பொறுப்பு. இவரைப் போன்றவர்கள் பிற மதங்களுக்கு மதிப்பு அளிப்பது இல்லை.
மலிவான விளம்பரத்துக்கோ, அரசியல் நோக்கங்களுக்கோ அல்லது இதர மோசமான நடவடிக்கைகளுக்கோ அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?
முன்யோசனையில்லாமல் இல்லாமல் பேசுபவராக உள்ள அவர், நாட்டை கொழுந்துவிட்டு எரிய வைத்துள்ளார். இருப்பினும் அவர் 10 ஆண்டுகள் வழக்குரைஞராக இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த வழக்கில் தனியொரு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. ஏனெனில் மற்றவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவர்.
ஆனால் நூபுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் கைது செய்யப்படவில்லை.
இது அவரின் செல்வாக்கைக் காட்டுகிறது.
தனது கருத்துகள் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அதனை மிகத் தாமதமாகத்தான் செய்துள்ளார்.
அதுவும் தனது கருத்துகள் மத உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு நிபந்தனையுடன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் செய்திருக்க வேண்டியதெல்லாம், தொலைக்காட்சியில் உடனடியாகத் தோன்றி ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்பதால், எதை வேண்டுமானாலும் கூறலாம் என்று அர்த்தமில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கு குறித்து எதற்காக விவாதம் நடத்தப்பட்டது?
ஒருவேளை அந்த விவாத நிகழ்ச்சி தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது புகார் அளித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நூபுர் நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
நூபுர் சர்மா உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்து மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm