நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் முதியவர் பலி: அறுவர் காயம்

உலுசிலாங்கூர் - 

டிரெய்லர் - லோரிக்கும் இடையே நிகழ்ந்த விடத்தில் முதியர் ஒருவர் மரணமடைந்த வேளையில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 1.10 மணியளவில் தஞ்சோங்மாலிம் - லெம்பா பெரிங்கின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்துடன் கோல குபு பாரு தீயணைப்பு படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு அரிசி மூட்டைகளை ஏற்று வந்த டிரெய்லரும் 10 டன் லோரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.

இவ்விபத்தில் சிக்கிய 60 வயது முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் நான்கு பாகிஸ்தான் ஆடவர்களும் 4 உள்நாட்டவர்களும் காயமடைந்தனர்.

மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று தீயணைப்பு படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset