நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு: முன்னாள் செனட்டர் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர்:

பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சையான வீடியோ பதிவை வெளியிட்ட முன்னாள் செனட்டர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் எகிறி வரும் பொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முன்னாள் செனட்டர் சித்தி அய்ஷா ஷேக் இஸ்மாயில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார்.

இந்த வீடியோ பதிவு சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முன்னாள் செனட்டரை விசாரணைக்காக புக்கிட் அமான் அழைப்பு விடுத்திருந்தது.

நாளை திங்கட்கிழமை இந்த விசாரணை நடைபெறவிருந்தது.

ஆனால், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஹஜ்ஜுப் பெருநாளுக்கு பின் இந்த விசாரணையை நடத்த புக்கிட் அமான் சம்மதம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset