நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப் பிரதமர், அமைச்சர் பதவிகளை கோர இது நேரமல்ல: மொஹைதீனை சாடும் நஜீப்

கோலாலம்பூர்:

துணைப் பிரதமர், அமைச்சர் பதவிகளை கேட்பதற்கு இது உகந்த நேரமல்ல என்று டான்ஸ்ரீ மொஹைதீனை டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சாடியுள்ளார்.

நாட்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சிக்கி தகித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இதுபோன்ற பதவிகளை கேட்பது மிகப் பெரிய அநாகரீகமாக உள்ளது என்று நஜீப் கூறினார்.

முன்னதாக பேசிய டான்ஸ்ரீ மொஹைதீன் விரைவில் பிரதமரை சந்தித்து அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை பெர்சத்து கோரவுள்ளதாக கூறியிருந்ததார்.

இவ்விவகாரம் தொடர்பில் தான் டத்தோஸ்ரீ நஜீப் தற்போது மொஹைதீனை சாடியுள்ளார்.

நாட்டின் பொதுத் தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது ஓராண்டில் அத் தேர்தல் வந்து விடும்.

இந்நேரத்தில் அமைச்சரவையில் பதவிகளைக் கோருவதும் புதிதாக பிரிவுகளை அமைப்பதும் அநாகரீகமாக இருக்கும் என்று நஜீப் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset