
செய்திகள் மலேசியா
பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேசனலின் சின்னத்தைப் பயன்படுத்தும்: மொஹைதின் யாசின் தகவல்
கோலாலம்பூர்:
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேசனலின் சின்னத்தைப் பயன்படுத்தும் என டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்துவும் பாஸ் கட்சியும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அக் கூட்டணியின் தலைவருமான அவர் நேற்று குறிப்பிட்டார்.
"பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைமைத்துவம் உறுதி செய்யலாம்.
"உதாரணமாக, ஜொகூர் மாநிலத்தில் பெர்சாத்து மட்டுமல்லாமல், பாஸ் கட்சியும் இந்தச் சின்னத்தில் போட்டியிடும்.
"இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் அறிகிறேன். அந்த முடிவு இப்போதும் நீடிப்பதாக நினைக்கிறேன். எனினும் தொகுதிப் பங்கீடு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
"மேலும் பல கட்சிகள் பெரிக்கத்தான் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும் இந்த விவகாரத்தை அக் கட்சிகள் கவனமாக அணுகுகின்றன," என்றார் மொஹைதின் யாசின்.
அமைச்சரவை பொறுப்புகள், துணைப் பிரதமர் பதவி ஆகியவை குறித்து தாம் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சில தினங்களுக்கு முன்பு இந்த ஆலோசனை நடைபெற்றது என்றார்.
அப்போது பிரதமருக்கும் பெரிக்கத்தான் கூட்டணிக்கும் இடையே முன்பு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பரீசிலிக்க வேண்டுமென தாம் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மொஹைதின் கூறினார்.
"பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமருடன் பேசினார். அரசாங்கத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது மட்டுமல்லாமல், புதிய நியமனங்கள் குறித்தும் பேசப்பட்டது.
நாங்கள் கூடுதலாக எதையும் கேட்கவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை குறித்தே கேட்கிறோம். அவற்றுள் துணைப் பிரதமர், அமைச்சர் பதவிகள் அடஙகும்," என்றார் மொஹைதின் யாசின்.
இதற்கிடையே, ஒருசில தொகுதிகளில் பாஸ் கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் என அதன் உச்சமன்ற உறுப்பினர் அஹ்மத் அம்ஸத் ஹாஷிம் கூறியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை கட்சித் தலைவர் ஹாடி அவாங் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 20, 2022, 11:28 am
பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டால் தேசிய முன்னணி வெற்றி பெறும்: துன் மகாதீர்
August 20, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் பலி
August 20, 2022, 10:44 am
கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு
August 20, 2022, 10:39 am
போதைப்பொருள் கடத்தல்: மரண தண்டனையில் இருந்து தப்பிய இரு ஆடவர்கள்
August 20, 2022, 10:11 am
வேலைவாய்ப்பு மோசடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 168 மலேசியர்கள்
August 20, 2022, 9:34 am
ரோஹின்யா அகதிகள் குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்
August 20, 2022, 7:55 am
தலைமை நீதிபதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து விசாரணை: ஐஜிபி தகவல்
August 19, 2022, 9:49 pm
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
August 19, 2022, 8:32 pm
நஜீப்பின் வழக்கறிஞர்கள் வாதங்களை தொடர வேண்டும்
August 19, 2022, 7:52 pm