செய்திகள் மலேசியா
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
பத்துமலை:
பத்துமலை 140 அடி உயர முருகனுக்கு பன்னீர் அபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் 140 அடி உயர முருகன் சிலை பத்துமலையில் கட்டப்பட்டது.
தற்போது இச்சிலை மலேசியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு இம்முருகப் பெருமானுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் 10ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
இவ்வாண்டு பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு
மாபெரும் பெருவிழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது.
குறிப்பாக முருகப் பெருமானுக்கு முதல் முறையாக டுரோன் வாயிலாக வாயிலாக பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்றது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், மஹிமா தலைவரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலையிலேயே பத்துமலையில் கூட தொடங்கி விட்டனர்.
காலை முதல் ஆலயங்களில் நடைபெற்ற பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மேலும் உற்சாகப்படுத்தினார்
January 1, 2026, 1:16 am
2026 புத்தாண்டை அர்த்தமுள்ள சாத்தியமானதாக மாறுவோம்: டத்தோ சரவணக்குமார்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
