நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்

புது டெல்லி:

பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதார் கார்டு இணைப்பை இந்திய அரசு கட்டாயமாக்கியது.

ஏனெனில், ஒருவர் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் கார்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓர் ஆதார் அட்டை மட்டுமே பெற முடியும்.

எனவே, பான் கார்டு - ஆதார் எண் இணைப்பு மூலம் போலி பான் கார்டுகள் முடக்கப்படும். பான்-ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset