நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எம்பிக்களின் இலவச ரயில் பயண செலவு கட்டணம் ரூ. 62 கோடி - ஆனால் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து

புது டெல்லி:

எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் இலவச ரயில் பயணத்துக்கு அளித்துள்ள சலுகையால் மத்திய அரசுக்கு  ரூ.62 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எம்பிக்களின் இந்த கட்டணச் செலவு வெளியாகி உள்ளது.

நடப்பு எம்.பி.க்கள் ரயில்களில் முதல் வகுப்பு அல்லது சொகுசு வகுப்பு பெட்டிகளில் மனைவியுடன் இலவச பயணம் மேற்கொள்ளலாம். முன்னாள் எம்.பி.க்கள் ஏசி2ம் வகுப்பு பெட்டிகளில் மனைவியுடனும் அல்லது ஏ.சி. முதல் வகுப்பில் தனியாக இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கௌர் மக்களவைச் செயலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கான பதிலில், "2017 முதல் 2022 வரையில் நடப்பு எம்.பி.க்களின் இலவச ரயில் பயணச் சலுகைக்கான செலவாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் செலவாக ரூ.26.82 கோடியும் ஆனதாக ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து ரசீது வந்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த 2020-21 காலத்திலும் எம்.பி.க்களின் இலவச ரயில் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், நடப்பு எம்.பி.க்கள் ரூ.1.29 கோடிக்கும், முன்னாள் எம்.பி.க்கள் ரூ.1.18 கோடிக்கும் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் பிற சிறப்புப் பிரிவினருக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் ரத்து செய்தது.

2020, மார்ச் 20 முதல் 2022, மார்ச் 31ஆம் தேதி வரையில் ரயிலில் பயணம் மேற்கொண்ட 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படவில்லை என்று ரயில் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset