நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

புது டெல்லி:

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கன்னையா லால் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவர், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனர்.

அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனர். அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் காவல் துறை டிஜிபி எம்.எல். லதேர் புதன்கிழமை கூறுகையில், ""கன்னையா லால் கொலை தொடர்பாக ரியாஸ் அக்தரி, கௌஸ் முகமது உள்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset