நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மகனிடம் ஜியோ பொறுப்பை ஒப்படைத்தார் அம்பானி

புது டெல்லி::

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகி 26 வயதாகும் தனது மூத்த மகன் ஆகாஷிடம்  அந்தப் பதவியை  ஒப்படைப்பதார். எனினும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி நீடிக்கிறார்.

இந்தியாவின் பெரும் மதிப்பு மிக்க நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் வாரிசுகளை நியமிப்பதற்கான முன்னோட்டமாகவே முகேஷ் அம்பானியின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

அதன் முதல் கட்டமாகவே, தற்போது 217 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 லட்சம் கோடி) மதிப்பிலான குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு , ஆகாஷ், இஷா என்ற இரட்டையர்களும், ஆனந்த் என்ற இளைய மகனும் உள்ளனர்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிடம் (30) சில்லறை வர்த்தக நிறுவனங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்பது தொழில்துறையினரின் பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.

இவர் ஆனந்த் பிரமலை ( பிரமல் குழுமத்தின் அஜய் மற்றும் ஸ்வாதி பிரமல் தம்பதியரின் மகன்) திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் (26), ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் (ஜேபிஎல்) இயக்குநராக கடந்த மே 2020}இல் நியமனம் செய்யப்பட்டார்.

அண்மையில் இவருக்கு, ரிலையனஸ் ரீடெயில் வென்சர் நிறுவனத்தின் (ஆர்ஆர்விஎல்) இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset