
செய்திகள் விளையாட்டு
விம்பள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடக்கம்
லண்டன்:
ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் மிக உயரியதான விம்பள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது.
இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பரிவில் நடப்பு சாம்பயன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பயா), முன்னாள் சாம்பயன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெண்கள் ஒற்றையர் பரிவில் முதல் நிலை வீராங்கனையும், சமீபத்தில் பிரான்ஸ் பட்டத்தை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பறகு களம் திரும்புகிறார்.
40 வயதான செரீனா 7 முறை விம்பள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
September 18, 2025, 10:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am