நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

40 வயதில் 40 கோல்கள்: 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ

ரியாத்:

போர்த்துகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

40 வயதாகும் ரொனால்டோ 2025ஆம் ஆண்டில் மட்டுமே 40 கோல்களை நிறைவு செய்துள்ளார்.

சவூதி புரோ லீக்கில் அல் நசர் அணியும் அல்-ஓக்டாத் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ரொனால்டோ 31, 45+3-ஆவது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தார்.
இதன் மூலம் 3-0 என அல் நசர் அணி வென்றது. இத்துடன் புள்ளிப் பட்டியலில் 30 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலமாக 14 முறையாக ஓராண்டில் 40க்கும் அதிகமான கோல்களை அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

மேலும் ரொனால்டோ மொத்தமாக 956 கோல்களை அடித்துள்ளார். விரைவில் 1,000 கோல்களை அடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset