நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோல்ப் மைதானத்தை வாங்குவதற்கான ரொனால்டோவின் முயற்சி நிராகரிக்கப்பட்டது

ரியாத்:

கோல்ப் மைதானத்தை வாங்குவதற்கான ரொனால்டோவின் முயற்சி நிராகரிக்கப்பட்டது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தனது 163 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு வீட்டிற்கு குடிபெயர உள்ளார்.

போர்த்துகல் லிஸ்பனில் இருந்து வெறும் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பிரத்யேக கடலோர ரிசார்ட்டில் இந்த சொகுசு சொத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த மாளிகை நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த மாளிகைகளில் ஒன்றாகும்.

இது ஒரு விசாலமான நீச்சல் குளம், ரொனால்டோவின் 65 மில்லியன் ரிங்கிட் கார் சேகரிப்பை சேமிக்க ஒரு நிலத்தடி கேரேஜைக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

எட்டு படுக்கையறைகள் கொண்ட இந்த சொத்து திட்டம் முடிவடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியது.

தற்போது சவூதி அரேபியாவில் உள்ள அல் நசருக்காக விளையாடும் ரொனால்டோ ஓய்வு பெற்ற பிறகு இங்கு குடிபெயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரொனால்டோ தனது புதிய வீட்டிற்கு அடுத்ததாக ஒரு கோல்ப் மைதானத்தை வாங்கவும் பாதுகாப்பை அதிகரிக்க முயன்றார்.

ஆனால் அவரது சலுகை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset