நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிலம்பம், கபடிப் போட்டிகளுக்கு முழு அங்கீகாரம்; விளையாட்டுத் துறையில் ஈகோவை பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ மோகன்

செமினி:

விளையாட்டுத் துறையில் ஈகோவை பார்த்தால் எதையுமே முழுமையாக சாதிக்க முடியாது.

மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.

மலேசிய சிலம்பக் கோர்வை கழகம் சிலாங்கூர் மாநிலத்தின் சிலம்ப அரங்கேற்ற விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

பல மாதங்கள் பயிற்சி பெற்று நிபுணத்துவம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய காலக் கட்டத்தில் நமது மாணவர்கள் கைத்தொலைபேசியில் கேம் விளையாட தொடங்கி விட்டனர்.

இருந்தாலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி பிள்ளைகளுக்கு போதித்து அவர்களையும் வெற்றியாளர்களாக இதுபோன்ற சங்கங்கள் உருவாக்கி வருகின்றன.

குறிப்பாக சீ விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக கபடி அணியினர் தங்கப்பதக்கம் வென்றனர்.

ஆக இதுபோன்ற போட்டிகளுக்கு அரசாங்கம் முழு ஆதரவை வழங்க வேண்டும்.

அவர்கள் பயிற்சி பெறுவதற்கும் போட்டிகளுக்கு செல்வதற்கும் அரசாங்கம் முழு நிதி உதவியை வழங்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் அந்த போட்டியாளர்களின் சாதனை மலேசியாவிற்கு பெருமையை தருகிறது.

ஆக அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து உலக போட்டிகளில் சாதிக்கும் நமது போட்டியாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை சுக்கிம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இறுதியாக விளையாட்டுத்துறையில் ஈகோவை பார்த்தால் எதையுமே முழுமையாக சாதிக்க முடியாது.

இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டுமென டத்தோ டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset