நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாலிவுட் நடிகைக்குத் தொல்லை: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

மும்பை:

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு அதிகமாக குறுஞ்செய்திகளை அனுப்புவார் எனக் கூறி பாலிவுட் நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது ஃபார்மில் இல்லாமல் இருக்கும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது ஃபேஷன் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:

நான் எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. பல வீரர்கள் என்னிடம் பேசுகிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு அதிகமாகக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்.

தற்போது, அதிகமாகப் பேசுவதில்லை. என்னுடைய பெயர் இந்த மாதிரியான எதிலும் சேர்வதில் விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், “எங்களுக்குள் ரொமான்டிக்கான உறவு இல்லை” என நடிகை கூறியதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் தனது மனைவியுடன் சூர்யகுமார் யாதவ் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஃபார்மில் இல்லாத இவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு அவர் மீது மேலும் அழுத்தத்தை கூட்டுவதாகவே இருக்கிறது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset