நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 3 ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தேர்தல்

ஜெருசலேம்: 

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது.

இதற்கான மசோதாவை 120 எம்.பி.க்களில் 110 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இறுதியாக மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

அது, அடுத்த மாதம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மசோதா நிறைவற்றப்பட்ட பிறகு, தற்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வார்.

ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவர் ஒப்படைப்பார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset