நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் ஜூன் 1 முதல் கட்டணம் விதிக்கப்படுகிறது

கலிபோர்னியா: 

இணையத்தில் கிடைக்கும் சிறந்த பட சேமிப்பு தளங்களில் ஒன்று கூகுள் போட்டோஸ். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்.

இந் நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், 'கூகுள் 2021 ஜூன் 1 முதல் கூகுள் போட்டோஸ் தளத்தில் 'உயர் தரமான' படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும்' என, அறிவித்தது.

கூகிள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய உயர் தரத்திலான படங்கள் மட்டும் வீடியோக்கள், 15 ஜிபிக்குள் இருந்தால் அதை கூகுள் கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது. இந்தப் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. அதாவது ஜூன் 1க்குப் பிறகு, கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு கூகுள் ஒன் (Google One) என்பதற்கான சந்தாவை செலுத்த வேண்டும்.

கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு 5 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கப்படும். குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் 10 டாலர்  அல்லது ஆண்டுக்கு 60 டாலர் ஆகும். 2டிபிக்கு வருடத்திற்கு ரூ.75டாலர் செலுத்த வேண்டும். 

இருப்பினும், உலகளவிலான பிக்சல் (Pixel) பயனர்களுக்கு இது பொருந்தாது என, கூகுள் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பிக்சல் சாதனம் வைத்திருந்தால், கூகுள் போட்டோசில் வரம்பற்ற வகையில் இலவச உயர்தர புகைப்படங்களை சேமிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. 

கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் கூகுள் போட்டோஸ் அறிவித்ததைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset