
செய்திகள் வணிகம்
உணவகத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றும் மலேசியர்களுக்கு iPhone பரிசு
கிள்ளான்:
மலேசியாவைச் சேர்ந்த கண்ணா கறி ஹவுஸ் உணவக நிர்வாகம் தங்கள் கடையில் வேலை பார்க்க முன்வரும் மலேசியர்களுக்கு ஐஃபோன் கைபேசி, அதிக ஊதியம் அளிக்க முன்வைத்துள்ளது. மேலும், குறைவான வேலை நேரத்தையும் நிர்ணயித்துள்ளது.
இந்த உணவகத்தின் ஏழு கிளைகளில் வேலை பார்த்து வந்த ஐம்பது வெளிநாட்டு ஊழியர்கள் கொரோனா காலகட்டத்தில் தாய்நாடு திரும்பிவிட்டனர்.
"இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அந்த ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துவிட்ட நிலையில், உள்நாட்டிலேயே தங்களுக்கு வேறு பணிகளைத் தேடிக்கொண்டனர்," என்கிறார் கண்ணா கறி ஹவுஸ் உணவகத்தின் மேலாளரான யோகா கண்ணன்.
வழக்கமாக மூன்று தொழிலாளர்கள் அடுத்த ஒரு மாதத்தில் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புகிறார்கள் எனில், புதிதாக மூன்று பேரை பணியமர்த்தப்படுவர் என்று குறிப்பிடும் அவர், கொவிட்-19 வேளையில் அதற்கு வாய்ப்பின்றிப் போனதாகச் சொல்கிறார்.
"இவ்வாறு சுழற்சி முறையில் தொழிலாளர்களைப் பணியமர்த்த முடியவில்லை. மேலும், அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான செலவுகள் வெகுவாக அதிகரித்துவிட்டன.
"விமானப் பயணக் கட்டணம், கொவிட் பரிசோதனைகள், இதர ஆவணங்களுக்கான செலவுகள் என்று அனைத்தும் அதிகரித்துள்ளன என்று சொல்லும் யோகா கண்ணன், இவற்றையெல்லாம் பரிசீலித்த பிறகே மலேசியர்களைப் பணியமர்த்தும் முடிவுக்கு வந்ததாக கூறுகிறார்.
மலேசியர்கள் தங்கள் உணவகத்தில் தொடர்ந்து ஆறு மாதங்கள் பணியாற்றினால் அவர்களுக்கு ஐஃபோன் கைபேசி பரிசீலிக்கப்படும் என்றும், பணி நேரம் காலை 9 மணி முதல் 5 மணி வரை எனக் குறைக்கப்படும் என்றும் உணவக நிர்வாகம் அறிவித்தது.
மேலும், பகுதி நேரமாக காலை 11 முதல் மாலை 3 மணி வரை என்ற கணக்கில் வாரந்தோறும் ஆறு நாள்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், ஒருமணி நேரத்துக்கு பத்து ரிங்கிட் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
"மலேசியர்கள் பலர் உணவகங்களில் தொடர்ந்து வேலை பார்ப்பதில்லை என்பது தெரிய வந்தது. சிலர் சில வாரங்கள் மட்டுமே பணியில் நீடித்துள்ளனர். ஒரு மாதம்கூட வேலை பார்ப்பதில்லை என்பதை அறிந்த பிறகுதான் 8 மணிநேரப் பணி, ஐஃபோன் கைபேசி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டோம்.
"இதுவரை ஐந்து மலேசியர்கள் எங்கள் உணவகத்தில் பணியாற்றி ஐஃபோன் கைபேசியைப் பரிசாகப் பெற்றுள்ளனர்.
"உணவு பரிமாறும் பணிக்காக மட்டுமே பணியமர்த்தப்படும் மலேசியர்கள், அதை மட்டுமே செய்வார்கள். ஏனெனில், எங்களிடம் பணியாற்றும் சமையல் கலைஞர்களையும், அவர்கள் சமைக்கும் உணவு வகைகளையும் அதே தரத்தில் வைத்திருக்க விரும்புகிறோம். அதே போல் பானங்கள் தயாரிப்பவர்களும் அந்தப் பணியை மட்டுமே செய்வர்.
"இதன் மூலம் எங்கள் உணவகத்தின் தரம், ருசி, சேவை முன்பு போல் எப்போதும் நீடித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்கிறார் யோகா கண்ணன்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm