நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதம் குறைவு

புது டெல்லி: 

ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக இந்திய பொருளாதாரம் நான்காவது காலாண்டில் குறைந்த அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.1 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது.

பணவீக்கம் பொருளாதார மீட்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.  அதன் காரணமாக, 2021-22 முழு நிதியாண்டில் (2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் ) நாட்டின் பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது.

இது, அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பாக மதிப்பீடு செய்திருந்த 8.9 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாகும். .

ஜனவரி- மார்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.8 சதவீத வளர்ச்சியை எட்டிய நிலையில், இந்திய பொருளாதாரம் அதை விட குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset