நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

5ஜி தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கும் முயற்சி: பினாங்கில் தொடங்கியது

ஜோர்ஜ்டவுன்:

5ஜி தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கும் முயற்சி பினாங்கில் மூன்று வெவ்வேறு இடங்களில் திங்கட்கிழமை நடைபெற்றது.

5ஜி சேவையை பினாங்கு மாநிலத்திலும் நாடு தழுவிய அளவிலும் அமல்படுத்துவதற்கு கூட்டரசு அரசாங்கமும் இதர தொடர்புடைய முகமைகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் Chow Kon Yeow தெரிவித்தார்.

5ஜி அகண்ட வரிசை அலைக்கற்றை உள்கட்டமைப்பு தொடர்பான பரிசோதனை நேற்று மூன்று இடங்களில் நடைபெற்றது. பினாங்கு அரசாங்கம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டது.

உள்ளூர் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் 5ஜி சேவைகள் தொடர்பாக எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளனர் என்பதையும், தேவையான கட்டமைப்பு பணிகள் குறித்து கண்டறியும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதல்வர் Chow Kon Yeow கூறினார்.

"தொலைத் தொடர்பு வசதிகள் என்பன மிக முக்கியமான அம்சமாகும். இது தொடர்பாக மத்திய அரசிடம், சம்பந்தப்பட்ட முகமைகளிடமும் பினாங்கு அரசு இணைந்து செயல்பட்டடு வருகிறது.

"எனினும் எந்த நிறுவனம் 5ஜி வலையமைப்பை இயக்கும் என்பது தெரியவில்லை. அதனால் ஜோர்ஜ்டவுனின் மூன்று வெவ்வேறு இடங்களில் பினாங்கு அரசு முதற்கட்ட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

"பினாங்கு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக உருவாகி வருகின்றன. இதன் காரணமாகவே தற்போதுள்ள நிறுவனங்கள் பினாங்கில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன.

"இம்மாநிலத்தில் உ்ள்ள சாலைகள், மினி்சாரம், தண்ணீர் விநியோகம், கழுவில் சுத்திகரிப்பு நிலையங்கள், தொலைத்தொடர்புகள் ஆகியவையும் கட்டமைப்பு வசதிகளில் அடங்கும்," என்றார் முதல்வர் Chow Kon Yeow.

தொடர்புடைய செய்திகள்

+ - reset