நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலேசியாவில் மருத்துவ மீட்பு, மறுவாழ்வு மையம்

தோக்கியோ:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலேசியாவில் மருத்துவ மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ, ஜப்பானின் சைபர்டைன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்படுவது குறித்து இப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

May be an image of 6 people, people standing, people sitting and suit

விபத்துகளில் சிக்கும் தனிநபர்கள் அல்லது தொழிலாளர்களின் மறுவாழ்வு, மீட்சிக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை உருவாக்க இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்படவுள்ளது.

பெர்கேசோவின் கீழ் தேசிய நரம்பியல், ரோபோட்டிக்ஸ், சைபர்னிக்ஸ் மறுவாழ்வு மையத்தை அடிப்படையாக கொண்டு பேரா மாநிலத்தில் முதல் மையம் கட்டப்படவுள்ளது.

May be an image of 2 people and people standing

May be an image of 2 people and people standing

May be an image of 5 people, people standing, suit and indoor

இதில் சிகிச்சையளிப்பதில் செயற்கை நுண்ணறிவு  மற்றும் ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் முன்னோடியாக இருக்கும்.

இந்த மறுவாழ்வு மையம் தென்கிழக்காசிய நாடுகளின் மக்களை உள்ளடக்கியதாகும்.

இதன் மூலம் மலேசியாவில் மருத்துவ சுற்றுலாத்துறையும் மேம்பாடு காணும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset