நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லிக்கு புறப்படவிருந்த நான்கு சென்னை விமானங்கள் ரத்து 

புதுடெல்லி: 

டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் மழையின் காரணமாக, நிலவும் மோசமான வானிலையால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விமான சேவை குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் பெய்த மழை, பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset