செய்திகள் இந்தியா
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு: கேரள அரசியல் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு
கொச்சி:
கேரளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு தொடர்பான வழக்கில் மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜின் முன்ஜாமீன் மனுவை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த மே 8ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வெண்ணலயில் நடைபெற்ற கோயில் விழாவில் கேரள மதச்சார்பற்ற ஜனபக்ஷ கட்சித் தலைவர் பி.சி.ஜார்ஜ் கலந்துகொண்டு பேசுகையில், "முஸ்லிம்கள் நடத்தும் கடைகளுக்குச் செல்வதை இதர மதங்களைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க வேண்டும்'' என்றார்.
இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, கொச்சியில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பி.சி.ஜார்ஜ் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.சி.ஜார்ஜ் பேசுகையில், "தங்கள் கட்டுப்பாட்டுக்குள் நாட்டை கொண்டு வரும் நோக்கில், முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் வஸ்துவை கலந்து தேநீர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களுக்கு இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல வேண்டாம்'' என்றார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
