செய்திகள் இந்தியா
பாகிஸ்தானைப் போல் இந்தியாவில் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன: ராகுல்
லண்டன்:
பாகிஸ்தானில் உள்ளதுபோன்று இந்தியாவிலும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, "இந்தியாவுக்கான யோசனைகள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில்,
பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆன்மா கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ளது போன்று இந்தியாவிலும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அரசு சொல்வதைக் கேட்க மட்டுமே வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
"அனைவருக்கும் சமவாய்ப்பு, மக்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு' என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவை நிலவியல் அமைப்பாக மட்டுமே பார்க்கின்றன. அதன் காரணமாகத்தான், ஒரு சிலருக்கு மட்டும் பலன்கள் சென்றடைய வழி செய்கின்றன" என்றார்.
மேலும், இந்திய வெளியுறவு கொள்கை குறித்து பேசிய ராகுல் காந்தி, "சில ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேசும்போது, இந்திய வெளியுறவு நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது. நாங்கள் கூறுவது எதையும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் கவனிப்பதே இல்லை. திமிர்பிடித்தவர்களாக உள்ளனர். எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதில்லை என்று தெரிவித்தனர்' என்றார்.
ஜெய்சங்கர் பதில்: ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், "ஆம். இந்திய வெளியுறவு கொள்கை மாறிவிட்டது உண்மைதான். அரசின் உத்தரவுகளை மட்டுமே வெளியுறவு அதிகாரிகள் கேட்டு நடப்பர். மற்றவர்களின் கருத்துக்கு அவர்கள் உரிய பதிலளிப்பர். அதனை திமிர்பிடித்தவர்கள் என்று கூறக்கூடாது. உறுதிப்பாடு என்றுதான் கூறவேண்டும். தேசத்தின் நலனை பாதுகாத்தல் என்றும் கூறலாம்' என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
