
செய்திகள் இந்தியா
எங்களுக்கு மன்னிக்கும் மாண்பைக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி உருக்கம்
புதுடெல்லி,
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஓர் இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஓர் அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை மிகவும் இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:22 pm
நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நகராக அறிவிப்பு
July 3, 2022, 6:56 pm
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
July 3, 2022, 5:01 pm
இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
July 1, 2022, 8:19 pm
கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்
July 1, 2022, 8:13 pm
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
July 1, 2022, 7:54 pm
இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு
July 1, 2022, 12:04 am
ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்
June 30, 2022, 10:52 pm