
செய்திகள் இந்தியா
மொழியை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: பிரதமர் மோடி சாடல்
ஜெய்ப்பூர்:
மொழி அடிப்படையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகளுக்கு எதிராக அண்மைகாலமாக தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசுகையில், அண்மைக்காலமாக மொழியை அடிப்படையாகக் கொண்டு புதிய சர்ச்சையை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மக்களைத் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்வது அவசியமாகிறது.
ஒவ்வோர் இந்திய மொழியிலும் நாட்டின் கலாசாரம் பிரதிபலிப்பதாக பாஜக கருதுகிறது.
மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா ஹிந்தி மொழியை உயர்த்தி பேசினார். ஒவ்வொரு இந்தியனும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்காக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. கர்நாடக மாநிலத்தில் இருந்து கடுமையான எதிர்வினை ஆற்றப்பட்டது. குறிப்பாக தென் மாநில மக்கள் தங்கள் மாநில மொழியைத்தான் முக்கியம் என்று கருதி வருகிறார்கள்.
பொது மக்களின் அதிருப்தி மேலோங்கியதால் பிரதமர் மோடி இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:22 pm
நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நகராக அறிவிப்பு
July 3, 2022, 6:56 pm
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
July 3, 2022, 5:01 pm
இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
July 1, 2022, 8:19 pm
கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்
July 1, 2022, 8:13 pm
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
July 1, 2022, 7:54 pm
இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு
July 1, 2022, 12:04 am
ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்
June 30, 2022, 10:52 pm