நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சீனாவின் பாலத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராகுல் கண்டனம்

புது டெல்லி:

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டுவதற்கு எதிராக ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரை பதிவில், "பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக ஒன்றிய அரசு கூறியது. இப்போது இரண்டாவது பாலத்தை சீனா கட்டும்போதும் அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

"இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்விதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது.

"இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset