நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்

கோலாலம்பூர்:

கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.

கெஅடிலான் கட்சி தேர்தலின் வாக்களிப்பு இணையம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே 18ஆம் தேதி தொடங்கி 67,149 பேர் இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் கூட இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.

இணையத்தின் வாயிலாக வாக்களிக்க 76,926 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று நள்ளிரவு வரை அவர்கள் வாக்களிக்கலாம்.

இத் தேர்தலில் இதுவரை மொத்தமாக 90,304 பேர் வாக்களித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கணக்கிட்டால் இதுவரை 8 சதவீதம் பேர் மட்டுமே இக் கட்சி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இவ்வாண்டு கட்சி தேர்தலில் வாக்களிக்க 1,118,423 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆனால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கிளந்தான், திரெங்கானு, ஜொகூர், கெடா, பகாங், கோலாலம்பூர், பெர்லிஸ், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு ஆகிய 10 மாநிலங்களில் இருந்து 20,813 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset