செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மஇகா தேசியத் தலைவருடனான நோன்புத் திறக்கும் விழா இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெறுகிறது.
இந்திய முஸ்லிம் சமுகத்தினர் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி.
அதே வேளையில் இந்த மஇகா கட்டடம் உட்பட கட்சியின் மேம்பாட்டில் இந்திய முஸ்லிம் சமுகத்தின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.
இதன் அடிப்படையில்தான் கட்சியில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு கட்சிகள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதே வேளையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் அச் சமுதாய மக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.
டான்ஸ்ரீ ஹனிபா மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
டத்தோ வீரா ஷாகுல் தாவூத் எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.
டத்தோ இப்ராஹிம் ஷா டேஃப் கல்லூரியின் நிர்வாகியாக பதவி வகிக்கிறார்.
குறிப்பாக எம்ஐஇடி தலைமை இயக்குநராக மும்தாஜ் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.
இப்படி கட்சியில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் மலேசியாவாழ் இந்திய முஸ்லிம் ஆதரவும் ஒத்துழைப்பும் இந்த கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கும் என நாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
