நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய காரில் கடத்தப்பட்ட 18 கிலோ ஹெராயின் சிங்கப்பூரில் பறிமுதல்

ஜோகூர்:

மலேசியாவில் இருந்து வந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு முகமை பறிமுதல் செய்தது.

கடந்த இருபது ஆண்டுகளில் ஒரே சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக மதிப்புள்ள போதைப்பொருள் இதுதான் அந்த முகமை தெரிவித்துள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக 23 முதல் 28 வயதுக்குட்பட்ட மூன்று மலேசிய ஆடவர்கள் கைதாகினர்.

புதன்கிழமை அன்று நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த காரில் இருந்து 17.7 கிலோ ஹெராயின், 261 கிராம் crystal methamphetamine, 2 கிராம் ecstasy மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த காரின் ஓட்டுநர் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டார். அவரிடம் இருந்து அந்த போதைப்பொருள்களை வாங்க இருந்ததாக நம்பப்படும் இரு ஆடவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.

அங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
15 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் அல்லது 250 கிராம் methamphetamine கடத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்படும்.

கடந்த காலங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தை மதிப்பு 4.4 மில்லியன் ரிங்கிட் என சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset