நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உக்ரைன் ஏற்றுமதிக்கு ரஷியா நிபந்தனை

மாஸ்கோ:

பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலித்தால்தான், உக்ரைன் ஏற்றுமதிக்கு கருங்கடலோர துறைமுகங்கள் திறந்துவிடப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.

மிகப் பெரிய உணவு தானிய ஏற்றுமதியாளரான உக்ரைன், கருங்கடல் வழியாக சரக்குக் கப்பல்களை அனுப்பவதற்கு ரஷியா தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் மிகப் பெரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, கருங்கடலோர துறைமுகங்களை உக்ரைன் பயன்பாட்டுக்கு ரஷியா திறந்துவிடவேண்டும் என்று அதிபர் விளாதிமீர் புதினிடம் ஐ.நா. உணவுப் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

Russia says opening Ukraine ports would need review of sanctions | Russia- Ukraine war News | Al Jazeera

உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் ஒரு காரணம்.

அந்தத் தடைகள் வழக்கமான வர்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கோதுமை, உரம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உக்ரைன் துறைமுகங்களை அந்த நாட்டுக்காக திறந்துவிட வேண்டுமென்றால், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset