நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கார், செல்போன் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்:

கார்கள், செல்போன்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு  தடை விதித்தது.

இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.200ஆக சரிந்தது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

Complete List of Imported Items Banned In Pakistan

இதுகுறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம்.

பொருளாதார ரீதியில் வலிமையான மக்கள் இந்த முயற்சிக்கு தலைமை வகிக்க வேண்டும். அப்போதுதான் முந்தைய அரசால் சுமத்தப்பட்ட சுமையை பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் சுமக்க வேண்டியிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset