நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை:

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை உயர்ந்துள்ளது.

மேலும், பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடுகளை தொடர்ச்சியாக விலக்கி டாலர்களை திரும்பப் பெற்று வருவதும் செலாவணி சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்து 77.60இல் நிலைத்தது.

இது முன்னெப்போம் காணப்படாத சரிவு நிலையாகும்.

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் ரூ.2,192.44 கோடி மதிப்பிலான பங்குகளைவிற்று சந்தையை வெளியேறியதாக இந்திய பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset