நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மார்ச் 2020 க்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக  ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்து வெ. 4.4 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் நாணயக் கொள்கையை கடுமையாக்கும் மோசமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த  மார்ச் 2020 க்குப் பிறகு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

காலை 9.19 மணிக்கு, உள்ளூர் குறிப்பு 4.4050/4080 ஆக இருந்தது. 

நேற்றைய முடிவான 4.3960/3975 இலிருந்து கிரீன்பேக்கிற்கு எதிராக இருந்தது.

மார்ச் 23, 2020 அன்று ரிங்கிட் வெ. 4.447ஐ எட்டியபோது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.

இது தற்போதையச் சூழலில் அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் மற்றும் பணவீக்கக் கண்ணோட்டத்தைப் பற்றிய உயர்ந்த பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பரதிபலிப்பாகும்.

அதிக பணவீக்க விகிதம் நுகர்வோர் துறையை பாதிக்கிறது. ஏனெனில், உயரும் செலவுகள் லாப வரம்பைப் பாதிக்கின்றன என்று பேங்க் இஸ்லாம் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃப்சானிசம் அப்துல் ரஷித் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset