நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Ketum இலைகள் ஏற்றுமதி: பரிந்துரை ஆவணத்தை தயாரித்தது கெடா அரசு

அலோர் ஸ்டார்:

மருத்துவ காரணங்களுக்காக Ketum இலைகளை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான பரிந்துரை ஆவணத்தை கெடா மாநில திட்டப் பிரிவு தயாரித்துள்ளது.

இதன் மூலம் ketum இலைகளைக் கடத்தும் நடவடிக்கைகளை ஒடுக்க முடியும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் கெடா மாநில ஆட்சி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்னர் இந்தப் பரிந்துரை மேலும் மெருகேற்றப்படும் என்று அவர் கூறினார்.

அதன் பின்னர் இந்தப் பரிந்துரையானது கூட்டரசு அரசாங்கத்தின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் அனுப்பப்படும் என்று இன்று மாநில ஆட்சி மன்ற கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி தெரிவித்தார்.

ketum இலைகளை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த மார்ச் மாதம், மலேசியாவில் வளர்க்கப்படும் ketum இலைகளுக்கு வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மத்தியில் அதிக தேவை இருப்பதால் அவற்றை ஏற்றுமதி செய்ய கூட்டரசு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி வலியுறுத்தி இருந்தார்.

இந்த நடவடிக்கையானது நாட்டில் ketum இலைகளை வளர்ப்பவர்களுக்கு உதவும் என்பதோடு, அரசாங்கத்துக்கும் வரி வருவாயை பெற்றுத்தரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ketum கடத்தலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக மாநில அரசு அதிகம் செலவிடுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset