நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்படாது: துருக்கி அதிபர்

அங்காரா:

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபர் எர்டோகன் கூறுகையில்,

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது.

காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் உள்ள குர்து கிளர்ச்சியாளர்களுக்கு புகலிடம் அளித்து வருகின்றன என்றார் அவர்.

துருக்கிக்கு எதிராக பல்வேறு ஐரேப்பிய நாடுகள் ஆயுத வர்த்தகத் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset