
செய்திகள் மலேசியா
கட்சித் தாவல் தடைச்சட்டம்; மேலும் சில கட்டங்கள் கடக்கப்பட வேண்டும்: வான் ஜுனைடி
கோலாலம்பூர்:
கட்சித் தாவல் தடைச்சட்டத்தைக் கட்டமைப்பதில் அதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்கான நடைமுறையில் மேலும் சில கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கையை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மேற்கொள்ளும் என்றும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தின்போது நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பார்வைக்கு அந்தச் சட்ட மசோதா வைக்கப்படும் என்றும் வான் ஜுனைடி கூறினார்.
"வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, சட்டத்தை கட்டமைப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளையும் அதில் சேர்ப்போம். பின்னர் அந்தச் சட்ட மூலமானது வழிகாட்டும் குழுவால் பரிசீலிக்கப்படும்.
"எனினும் இதற்கான தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை," என்று அமைச்சர் வான் ஜுனைடி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி உள்ளனர். இதனால் இருமுறை கூட்டரசு அரசாங்கம் மாறி உள்ளது.
இதையடுத்து கட்சித் தாவல் தடைச்சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்தச் சட்டம் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு, அதன் பிறகே அமல்படுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am